5 மாதமாக தூக்கத்தை தொலைத்த தென்கொரிய மக்கள்.. 24 மணி நேரமும் ஓய்வின்றி சத்தம் போடும் ஸ்பீக்கர்ஸ்!
உலக நாடுகளுக்கு மத்தியில் தனித்து நிற்கும் வடகொரியா, தென்கொரியா மீது பகைமையை கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் என உலகையே உசுப்பேத்திக்கொண்டிருக்கும் வேளையில் சமீபகாலமாக ரஷ்யாவுக்கு ராணுவ உதவி செய்தும், ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பியும் தனது இருப்பை காட்டி வருகிறது.
சமீபத்தில், தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா, அந்நாட்டுடனான அனைத்து எல்லை தகவல் தொடர்புகளையும் அழித்தது. தங்கள் நாட்டு குப்பைகளை பலூன்கள் நிரம்ப அங்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டு வரும் நிலையில், அந்த நாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்போது புதிய வழியை கண்டுபிடித்துள்ளது.
அதாவது எல்லையோர பகுதிகளில் 24 மணி நேரமும் அதிக அளவில் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக தென்கொரியாவில் உள்ள டாங்கன் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்பீக்கர்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் உரத்த சத்தம் எழுப்பி மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருவதாகவும், இதனால் மக்கள் தூக்கமின்றி தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!