தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இயக்கப்பட்டு வரும் தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து இரவு 11:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்குச் சென்னை தாம்பரத்தைச் சென்றடையும். சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 3:40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:30 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும்.
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் நாட்கள்: ஆகஸ்ட் 3, 10, 17, 24 மற்றும் 31. தாம்பரத்தில் இருந்து புறப்படும் நாட்கள்: ஆகஸ்ட் 4, 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1.

இந்தச் சிறப்பு ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது முன்பதிவு மையங்கள் மூலம் பயணச் சீட்டுகளைப் பதிவு செய்துகொள்ளலாம்.
