ஆக.1 முதல் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!
தென் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சில முக்கிய விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில் - கோயம்புத்தூர் இடையேயான ரயில்களில் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 29 வரை ஒரு கூடுதல் தூங்கும் வசதிப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரம் - திருப்பதி மற்றும் ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயங்கும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 வரை ஒரு கூடுதல் முன்பதிவு இருக்கைப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.
தொடா் விடுமுறைகள் மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் இந்தத் தற்காலிகக் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நடவடிக்கை மூலம், காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏராளமான பயணிகள் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
