சென்னையில் பூட்டிய வீட்டிற்குள், தவறி விழுந்து சிக்கிக் கொண்ட செளகார் ஜானகியின் மகள் பத்திரமாக மீட்பு!

 
சவுகார் ஜானகி செளகார்

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் பூட்டிய வீட்டிற்குள் வீல்சேரில் இருந்து கீழே தவறி விழுந்து நகர முடியாமல் தவித்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மகளைத் தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்துப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மகளான யாக்னபிரபா (76), சென்னை துரைப்பாக்கம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இவர், நடமாட முடியாமல் வீல்சேரைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக வீல்சேரில் இருந்து தவறி கீழே விழுந்த அவரால், சுயநினைவோடு இருந்தும் எழுந்து செல்லவோ கதவைத் திறக்கவோ முடியாமல் வீட்டிற்குள்ளேயே தவித்துள்ளார்.

சௌகார் ஜானகி சவுகார்

நீண்ட நேரமாகியும் அவரைத் தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், உடனடியாகக் காவல் துறைக்கும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கீழே விழுந்து கிடந்த யாக்னபிரபாவை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசிதமான விரைவான நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.