அதிமுக மா.செ., கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மொத்தம் 84 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், கட்சியின் முக்கியத் தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். இக்கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தேர்தல் தோல்விகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இந்த மூத்த தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
