அமெரிக்காவில் ஒவ்வொரு குழந்தைக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பங்குகள்... எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

 
ஸ்பேஸ் எக்ஸ்

 

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலா 2 பங்குகளை வழங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். நிறுவனத்தின் சார்பில் ஒரு பங்கும், தனது தனிப்பட்ட பங்கில் இருந்து ஒரு பங்கும் என மொத்தம் இரண்டு பங்குகள் வழங்கப்படும் என அவர் எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட டிரம்ப் கணக்குகளில் (Trump accounts) இந்தப் பங்குகள் வரவு வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் பங்குகளை மாற்றம் செய்ய உள்ள நிலையில், எலான் மஸ்க் தனது தனிப்பட்ட பங்குகளை அடுத்த ஆண்டு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

விண்வெளியில் ஒரு மில்லியன் டேட்டா சென்டர் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு குறித்த விவாதங்களுக்கு மத்தியில், இந்த சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது