ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திடீர் சந்திப்பு!

 
ஆளுநர் அர்லேகர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவைத் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதை ஒட்டி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவர்கள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான லோக் பவனில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 17-வது சட்டமன்றத்தின் முதல் வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவுபெற்றதை அடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆளுநரைச் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜேசிடி பிரபாகர்

இந்தச் சந்திப்பின்போது, சட்டமன்றத்தின் திறமையான செயல்பாடு, கூட்டத்தொடர் நடைபெற்ற வித மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்து இருவரும் முக்கியக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.