சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸை நோஸ்கட் செய்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

 
ஓபிஎஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் பேசிய குறிப்பிட்ட வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையைச் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மறுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்குத் திங்கட்கிழமை பதிலளிப்பதாகக் கூறிய முதல்வர் விஜய், அவைக் குறிப்பில் உள்ள விவாதத்தின்போது "யாரும் எந்திரிச்சி ஓடக்கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும்" என்று அவையில் குறிப்பிட்டிருந்தார்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்  சட்டசபை தமிழக

முதல்வரின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அந்த வார்த்தைகளைப் பொருத்தமற்றவை எனக் கூறி அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஓபிஎஸ்-ன் கோரிக்கையை உடனடியாக நிராகரித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "அதை எல்லாம் நீக்க முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.