திமுகவினர் செயல் வருத்தம் அளிக்கிறது... சபாநாயகர் உரை!

 
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்  சட்டசபை தமிழக

முதலமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் தீவிரமான அமளியில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர் முதல்-அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பித் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

சட்டப்பேரவை விஜய் தீர்மானம்

உடனே திமுகவினர் சபாநாயகரின் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா மற்றும் கோஷம் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முழக்கமிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களைக் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரைக் குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.

உதயநிதிவிஜய் விஜய்

இதன் பின்னர் சபாநாயகர் பேசுகையில், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தான் முதலமைச்சரின் பதிலுரையை கேட்க வேண்டும் என்பதற்காகவே சபைக்கு வந்ததாகத் தெரிவித்தார். சபையில் நடந்த நிகழ்வுகளால் தனக்கு ரத்த அழுத்தம் உயர்ந்து, மருத்துவரே இல்லாமல் அது சரியாகியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் விதிகளுக்குப் புறம்பாக எதையும் பேசவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.