இன்று தமிழகம் முழுவதும் 1100 சிறப்பு பேருந்துகள்!!

 
அரசு பேருந்து

ஆகஸ்ட் 12ம் தேதி சனிக்கிழமை இன்று, நாளை மற்றும் சுதந்திர தினமான ஆகஸ்ட்15ம் தேதி  விடுமுறை என்பதால் தொடர் விடுமுறை. இந்த தொடர் விடுமுறையை மக்கள் சொந்த ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வார இறுதி நாட்களில் கல்வி மற்றும் பணிக்காக சென்னை உட்பட   சுற்றுப்புற பகுதிகளில் தங்கி இருக்கும் நபர்கள் நீண்ட விடுமுறை மற்றும் பொதுவிடுமுறை தினங்களில்  சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அரசு பேருந்து

அந்த வகையில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும்.  இந்நிலையில்  வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தின விடுமுறை என தொடர் விடுமுறை என்பதால் தொடர்ந்து 4  நாட்கள்  விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றனர்.  நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.  நேற்று சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருந்தபோதிலும், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில்   கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

அரசு பேருந்துகள்


மற்ற நாட்களை விட பல மடங்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும்   2,100 பேருந்துகள் உடன் கூடுதலாக 543 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  இந்த பேருந்துகள் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் என  தமிழகத்தின்  முக்கிய நகரங்களுக்கு   இன்றும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே போல் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1100 பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web