இன்று சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
அரசுப் பேருந்து
புனிதவெள்ளி, ஈஸ்டர் மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்குச் சென்றிருப்பவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று மாலை  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.  

இந்த தொடர் விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சென்னைக்கும் கூடுதல் பயணிகள் திரும்புவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அரசு பேருந்து

திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கும், அதே போன்று நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கும் கூடுதலாக இன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

பேருந்து

தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் சென்னைக்கு திரும்புபவர்களின் வசதிக்காக பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web