நாளை முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்!!

 
சிறப்பு பேருந்து

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக கொண்டாடப்படுவது திருவண்ணாமலை. இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் அண்ணாமலையாரை தரிசிக்க உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவர். மலையே சிவபெருமானாக கொண்டாடப்படுவதால் பௌர்ணமி நாட்களில் மலையை கிரிவலம் வருவர். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர். அந்த வகையில் ஆடி மாத பௌர்ணமி ஆகஸ்ட் 1ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

அரசு பேருந்து

இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
 அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்  “திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 01 மற்றும் ஆகஸ்ட் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  

அரசு பேருந்து


அதன்படி, ஆகஸ்ட்.1 ம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும், ஆகஸ்ட் 2ம் தேதி மறு மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும்.கூடுதல்   பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைப்பேசி எண் 9445014452 ,தலைமையக கைப்பேசி எண் 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.tnstc.in என்கிற இணையதளம் மற்றும்  tnstc app மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web