திருச்சியில் மின் இணைப்பு மாற்ற சிறப்பு முகாம் நேற்று தொடக்கம்!!

 
மின்சார வாரியம்


மின் இணைப்பு பெயர் மாற்ற சிரமங்களை நீக்க, கட்டணம் செலுத்திய அன்றே அல்லது அடுத்த நாளில் பெயர் மாற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நேற்று  துவங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது, இம்முகாம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடக்கிறது.

மின்சாரம்
இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9  முதல் மாலை 5 மணி வரை செயல்ப டும் பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 726 கட்டணம் செலுத்த வேண்டும் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப் பிக்கலாம்.
பெயர் மாற்றம் செய்ய சமர்ப்பிக்க பெயர் வேண்டிய ஆவணங்கள் 1. ஆதார் அட்டை, 2 (அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் அல்லது செட்டில் மென்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற ஆணை.  
நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணமாக பரிசு பத்திரம், செட் டில்மென்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு.

மின்சார சிறப்பு முகாம்
இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்ப தாரர்கள் இறப்புச் சான்று, தற்போதைய செட்டில்மென்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப் படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் செய்யப்படும். 
நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்,குழு வீடுகளில் பொது சேவைகளுக் கான மின் இணைப்புகளில் வீதப்படி பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்ப தாரர்கள் பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள் குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் வளாகம், அப்பார்ட்மென்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கவேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web