தமிழகம் முழுவதும் ஆக.29-ல் e-KYC சிறப்பு முகாம் - ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 
ரேஷன்

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளில் e-KYC பதிவை விரைந்து முடிக்க வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது e-KYC சரிபார்ப்புப் பதிவை எளிதாகச் செய்துகொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் இந்தச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து செயல்படும்.

ரேஷன்

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள தகுதியான உறுப்பினர்கள் அனைவரும் இந்தச் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தித் தங்களது e-KYC பதிவை விரைந்து முடித்துக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.