ரூ.10,000 லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மதியழகன், பள்ளி மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்ட புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இடத் தகராறு தொடர்பான புகார் எழுந்துள்ளது. அப்பெண் வீட்டில் இல்லாததால், அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் விசாரணை நடத்தியுள்ளார்.

அந்தப் பள்ளி மாணவனைப் பொய் வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக மதியழகன் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அவர்கள் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையைச் சேர்ந்தவரே பள்ளி மாணவனிடம் லஞ்சம் கேட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
