சிறப்பு டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - ஜூலை 4, 5 தேதிகளில் தேர்வு!

 
ஆசிரியர் தேர்வு வாரியம்

பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக மற்றும் பிற பிரிவுகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்தத் தொடரின் முதல் சிறப்பு டெட் தேர்வு வரும் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்விற்கான அதிகாரப்பூர்வ ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறப்பு டெட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.gov.in பக்கத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காகத் தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விபரங்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்.

நீண்ட காலமாகத் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கில் இந்தச் சிறப்பு வாய்ப்புகள் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து நடத்தப்படவுள்ள 3 சிறப்புத் தேர்வுகளில், முதற்கட்ட தேர்வே ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. தேர்வு நடைபெறும் மையங்களின் விபரங்கள் மற்றும் தேர்வு நேரக் கட்டுப்பாடுகள் ஆகியவை ஹால் டிக்கெட்டில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதனை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.