தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு... எழும்பூர் - கொல்லம் ரயில் சேவை நீட்டிப்பு!

 
ரயில்

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றிச் சென்று வர ஏதுவாக, சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வழியாகக் கொல்லத்திற்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்துத் தென்னக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் தொடர்வண்டிகளில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றவும் சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06117 / 06118) சேவையின் பயணக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு தொடர்ந்து இயங்கும்.

எக்ஸ்பிரஸ் ரயில்

கொல்லம் - சென்னை எழும்பூர் (06118): மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி இயக்கப்படும் ரயில் சேவை வரும் நவம்பர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாகச் சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகக் கொல்லத்தைச் சென்றடையும்.

புறநகர் மின்சார ரயில்

பண்டிகைக் காலத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள், இந்த கூடுதல் ரயில் வசதியைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.