இன்றும், நாளையும் திருச்சி, மதுரை வழியே சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில் அறிவிப்பு.. முன்பதிவு துவக்கம்!

 
ரயில்
 

வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக இன்றும், நாளையும் சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, நாகர்கோவில் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்

இந்த ரயில் இன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இன்று இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் எண் 06055), நாளை ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடைகிறது. அதேபோல, நாளை ஆகஸ்ட் 15ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட இருக்கும் நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில் எண் (06056), ஆகஸ்ட் 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.10 மணிக்கு எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைகிறது. 

ஊட்டி மலை ரயில் ரத்து!!

ஆவடி, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று நாகர்கோவிலைச் சென்றடைகிறது. 

சென்னை - நாகர்கோவில் மார்க்கமாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. இதேபோல, சென்னை - கொச்சுவேலி வழித்தடத்திலும், இன்றும், ஆகஸ்ட் 21ம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா