விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்... இப்பவே திட்டமிடுங்க!

 
ரயில் முன்பதிவு

 தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் தமிழ்ப் புத்தாண்டு, ரமலான், வார விடுமுறை, வாக்குப்பதிவு என தொடர் விடுமுறைகள் .இதனையடுத்து பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். பள்ளிகளில் கோடை விடுமுறையும் விடப்பட்டதால் சுற்றுலாவுக்கும் திட்டமிட்டு வருகின்றனர்.

ரயில்

இவர்களின் வசதிக்காக குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ”சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் 12, 19, 26 மற்றும் மே 10,17,24,31 ல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10 க்கு நெல்லை சென்று சேரும்.

ரயில்

நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 11, 18,25 மற்றும் மே மாதத்தில் 9, 16, 23, 30 ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். நெல்லையில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். கோவில்பட்டி, சிவகங்கை, பட்டுக்கோட்டை, திருவாரூர், சீர்காழி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web