ஏப்ரல் 20 முதல் தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடை கால சிறப்பு ரயில்கள்!

 
ரயில் டிக்கெட் ரயில் டிக்கெட்


கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தெற்கு ரெயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே வரும் ஏப்ரல் 20 முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ரெயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சிறப்பு ரயில்

தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 06018) ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு (வண்டி எண்: 06017) ஏப்ரல் 21 மற்றும் 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் வழியாக இயக்கப்படுவதால் இடைப்பட்ட நகரங்களில் வசிக்கும் பயணிகளுக்கும் இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

எக்ஸ்பிரஸ் ரயில்

இந்தச் சிறப்பு ரெயில்களில் மொத்தம் 17 நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதியான பயணத்தை மேற்கொள்ள முடியும். கோடை விடுமுறை மட்டுமின்றி தற்போது திருமண விசேஷங்கள் அதிகம் நடைபெறுவதால், வழக்கமான ரெயில்களில் இடமில்லாதவர்களுக்கு இந்தச் சேவை பயனுள்ளதாக இருக்கும். இந்தச் சிறப்பு வசதியினைச் செய்துகொடுத்த தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.