சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்.. பயணத்த இப்பவே திட்டமிடுங்க!

 
ரயில்

 தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்ல எப்போதும் கூட்ட நெரிசல் தான். பயணிகளின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில்  தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என  அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில் முன்பதிவு

அதில் ”பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது.  அதன்படி, கோவை-சென்னை இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்படும்.  இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்  மார்ச் 31ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.

ரயில் டிக்கெட்

அதேபோல் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் (எண் 06049) ஏப்ரல்1ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கோவையை சென்றடையும். கோவையிலிருந்து சென்னைக்கு வரும் ரயில் பெரம்பூரில் நின்று செல்லும். சென்னையிலிருந்து புறப்படும் பெரம்பூரில் நிறுத்தப்பட மாட்டாது” எனத் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web