சென்னையில் சுற்றித்திரிந்த ஸ்பைடர்மேன்.. கூடிய பொதுமக்கள்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் உண்மை!
நேற்று நள்ளிரவு 12 மணியளவில், சென்னை அண்ணா சாலை மற்றும் ஜி.பி. சாலை சந்திப்பில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் ஸ்பைடர்மேன் வேடத்தில் இருந்த ஒரு இளைஞர், ஒரு திரைப்படத்தில் வருவது போல் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக, அண்ணா சாலையிலுள்ள உணவகங்களில் இரவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், அந்த இளைஞனைப் பார்க்க அண்ணா சாலையிலுள்ள ஒரு கூட்டம் கூடியது.

அந்த நேரத்தில், திருவல்லிக்கேணி போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அண்ணா சாலையிலுள்ள போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதைக் கண்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போதுதான், ஒரு இளைஞர் ஸ்பைடர்மேன் வேடத்தில், தனது இரு கைகளையும் நீட்டி, ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் வருவது போல் ஸ்டண்ட் செய்து கொண்டிருப்பதை போலீசார் அறிந்தனர். உடனடியாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அண்ணா சாலையிலுள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இனிப்பு கடை நடத்தி வரும் அக்பர் அலி (28), பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தனது கடையின் வியாபாரத்தை அதிகரிக்கவும் ஸ்பைடர்மேன் வேடத்தில் இருந்ததாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அக்பர் அலியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
