பிரம்மாண்ட காட்சிகளுடன் அசத்தும் ஸ்பைடர் மேன்... திரையரங்குகளில் ரசிகர்கள் வரவேற்பு!

 
Spiderman

டெஸ்டின் டேனியல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான விறுவிறுப்பான கதைகளத்துடன் பிரமாண்டமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுத்துள்ளது. முதன்மை கதாபாத்திரமான பீட்டர் பார்க்கராக நடித்துள்ள டாம் ஹாலண்ட், தனது துடிப்பான மற்றும் கலக்கலான நடிப்பால் மீண்டும் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாடி சிங்க்ஸ் தனது வழக்கத்திற்கு மாறான மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திப் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். மேலும் பிரெட் பவால்க்கின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் மெருகூட்டி, திரையில் பிரமாண்டத்தைக் கொண்டு வந்துள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் சற்று பொறுமையைச் சோதிக்கும் வகையில் மெதுவாக நகர்ந்தாலும், ஒட்டுமொத்த உருவாக்கமும் காட்சி அமைப்புகளும் ரசிகர்களைத் தொய்வின்றிப் பயணிக்க வைக்கின்றன.

India's first shows begin here. 🕸️ Spider-Man: Brand New Day — grand red carpet premiere at Allu Cinemas, in collaboration with Sony Pictures India. On Indias largest Dolby Cinema screen. 29th July.

குறிப்பாகப் படத்தின் 2ம் பாதியில் இடம்பெற்றுள்ள ஹல்க் உடனான சண்டைக்காட்சியும், பிரமிக்க வைக்கும் வகையிலான இறுதிக்காட்சியும் ரசிகர்களைக் வெகுவாகக் கவர்ந்துள்ளன. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் படம் முழுமையடைந்துள்ளது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறது.