அதிகாலை தரிசனத்தில் நடிகைகள் ஸ்ரீலீலா, ஸ்ரீ கவுரி பிரியா… திருப்பதியில் குவிந்த ரசிகர்கள்!
Nov 13, 2026, 17:30 IST
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா இன்று (நவம்பர் 13) அதிகாலை சாமி தரிசனம் செய்தனர்.
இருவரும் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டனர். கோவிலுக்கு வந்த நடிகைகளை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம்
தரிசனத்தைத் தொடர்ந்து வேத பண்டிதர்கள் நடிகைகளுக்கு வேத ஆசீர்வாதம் வழங்கினர். நடிகைகள் இருவரும் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்த பக்தர்கள், அவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்தத் தரிசனத்தின்போது நடிகைகளைக் காண பக்தர்கள் ஆர்வம் காட்டியதால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
