இலங்கையில் சாலை விபத்தில் 23 வயது பொறியியல் மாணவி பலி ... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
23

 

இலங்கையின் கொழும்பு நாவல பகுதியில், சாலை விபத்தில் 23 வயது பொறியியல் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் பட்டப்படிப்பை முடிக்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

பாதசாரி கடவையில் நடந்த விபத்து

பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த சக்குனி துவானி என்ற மாணவி, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அருகே உள்ள பாதசாரி கடவையில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கெப் ரக வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

ஓட்டுநர் கைது; போலீசார் விசாரணை

மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையிலும் மண்டை ஓட்டிலும் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்