இன்று கடைசி டி20 போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் மோதல்!

 
மகளிர் பாகிஸ்தான் இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி, டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை: தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்ற இலங்கை அணி முனைப்பு காட்டி வருகிறது.

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை நேர்மறையாக முடிக்க பாகிஸ்தான் அணி தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் இலங்கை அணியின் இமேஷா டுலானி மற்றும் கேப்டன் சாமரி அத்தப்பத்து ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகின்றனர். பாகிஸ்தான் தரப்பில் ஷவால் ஜுல்ஃபிகர் மற்றும் முனீபா அலி ஆகியோர் முக்கிய ரன் குவிப்பாளர்களாக திகழ்கின்றனர்.