ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது - இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறல்!
Oct 4, 2026, 08:25 IST
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நடுக்கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோட்டுக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, எடிசன், மத்தியா, ஜான்ஜெய்சன், ஸ்டிவன்சன், சுபார்டன், அபிஷ்டன், மோபிஸ், அந்தோணி பிரதீப் மற்றும் அந்தோணி ஆகிய 9 மீனவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
