இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட தமிழக மீனவர்கள் 35 பேருக்கு செப்.11 வரை காவல் நீட்டிப்பு!

 
அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!
இலங்கையில் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 35 பேருக்கு மீண்டும் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்களுக்கு செப்டம்பர் 11ம் தேதி வரை மூன்றாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் ராமேஸ்வரம் போராட்டம்

ராமேசுஸ்ரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த  35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் ஆகஸ்ட் 8ம் தேதியன்று  கைது செய்தனர்.

மீனவர்கள் கைது

இதனையடுத்து 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மீனவர்களின் நீதிமன்றக் காவல்  இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா மீனவர்கள் 35 பேருக்கும் செப்.11ம் தேதி வரை மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 35 பேரும் வாரியாபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web