மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. 6 பேர் மீது வழக்கு பதிந்த தமிழக காவல்துறை.!
Nov 5, 2023, 11:53 IST
இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்கள் முன் வேதாரண்யம் பகுதியில் உள்ள வானவன் மகாதேவி கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுபோன்ற இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
From
around the
web