ஸ்ரீபெரும்புதூர் அருகே கோர விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரவிசங்கர் என்பவர் தனது மகள் சௌந்தர்யாவுடன் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பைக் லாரியில் சிக்கி சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரவிசங்கரும், அவரது மகள் சௌந்தர்யாவும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தந்தை, மகள் இருவரும் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் லாரி ஓட்டுநர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
