ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஒரே நேரத்தில் ஒளிர்ந்த 10,008 நெய் தீபங்கள்!

 
வேலூர்

 

வேலூர் மாவட்டம் திருமலைக்கொடியில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக் கோயிலில், உலக நன்மை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டி 10,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் பிரம்மாண்டமான ஸ்ரீ சக்கர வடிவம் அமைக்கப்பட்டு, அதில் 10,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன. தீபங்களின் ஒளியில் ஸ்ரீ சக்கர வடிவம் ஜொலித்தது. இந்த வழிபாடு உலக மக்கள் நலமுடன் வாழவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவும் வேண்டி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Ekadasi Light Lamping - Sripuram Golden Temple

இந்தச் சிறப்பு நிகழ்வில் வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பக்தர்கள் தீப ஒளியில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சக்கரத்தைத் தரிசித்து வழிபட்டனர்.