ஸ்ரீரங்கம் கோவிலில் ஆதி பிரம்மோற்சவம் கொடியேற்றம்... ”ரங்கா ரங்கா ” என பரவசத்தில் பக்தர்கள்!

 
ஸ்ரீரங்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்விற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து 3.00 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார், பின்னர் கொடி படத்திற்கு பட்டச்சாரியார்கள் பூஜைகள் செய்யப்பட்டு கும்ப லக்கணத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா! டிசம்பர் 14 திருச்சியில் உள்ளூர் விடுமுறை!!
இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர். நேற்று முதல் 11 நாட்கள் நடைபெறும் ஆதி பிரம்மோற்சவத்தின் போது தினமும் நம்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஸ்ரீரங்கம் தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 20ம் தேதி தங்க கருட வாகனத்திலும், உறையூர் கமலவல்லி நாச்சியார் நம்பெருமாள் சேர்த்தி சேவை வருகின்ற மார்ச் 22ம் தேதி அன்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை மார்ச் 25ம் தேதியும் கோரதம் எனப்படும் பங்குனி தேர் உற்சவம் மார்ச் 26ம் தேதி அன்றும் நடைபெற இருக்கின்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web