நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!!

 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

108வைணவதிருத்தலங்களில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தலம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.  இங்கு பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.  பூரம் நட்சத்திரத்தையொட்டி நடக்கும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிடுவர்.  நடப்பாண்டு ஆடிப்பூர திருவிழா ஜூலை 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 18ம் தேதி 5 கருட சேவை நடைபெற்றது.  

ஆண்டாள் கோவில்

7ம்  நாளான நேற்று  இரவில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சயன சேவை நடைபெற்றது.  ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.  விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ஜூலை 22ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பிறகு  மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்வர். காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர்.  தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புக்கள்  அகற்றப்பட்டு தேர் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர்

தேரின் சக்கரங்கள் சீராக செல்லும் வகையில் திருச்சி பெல் நிறுவன அதிகாரிகள்  சரி செய்துள்ளனர். மேலும் தேர் வேகமாக நகரும்போது ஹைட்ராலிக் பிரேக் பிடித்து நிறுத்தவும் ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர் சக்கரங்கள் பதியாமல் இருக்க ரதவீதிகளில் பல இடங்களில் ராட்சத இரும்பு பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.  தேரின் பின்புறம் இருந்து தள்ளுவதற்கு வேளாண்மை துறை சார்பில் பொக்லைன் எந்திரங்களும் வரழைக்கப்பட்டுள்ளன. தேர் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. அத்துடன்  ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web