60 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கவால் குரங்குகள் கணக்கெடுப்பு... ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை திட்டம்

 
சிங்கவால் குரங்கு

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கவால் குரங்குகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

Tamil Nadu forest depart likely to conduct first-ever Lion-Tailed Macaque census next year

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் காப்பகத்தில் யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் வாழும் சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கையைக் கண்டறிய வனத்துறை திட்டமிட்டுள்ளது.இதற்கான கணக்கெடுப்பு வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக வன ஆர்வலர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Species: Lion-Tailed Macaque - Civilsdaily

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்தக் கணக்கெடுப்பு, சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விட நிலவரத்தை அறிந்துகொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனவிலங்குகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.