அதிர்ச்சி.. பெண் அதிகாரி கொடூர கொலை.. 8 நிமிடத்தில் வெறியை தீர்த்து கொண்ட கார் டிரைவர்..!

 
பிரதிமா 

பிரதிமா (45)  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மாநில அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள தொட்டகல்லசந்திராவில் வசித்து வருகிறார்.. ஆனால் கடந்த நவம்பரில் யாரோ அவரை படுகொலை செய்து விட்டு வீட்டில் வைத்து கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Karnataka Official Murdered At Home While Husband, Son Away

வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்பட ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின் கிரண்குமாரை போலீசார் கைது செய்தனர். பிரதிமா பணிபுரிந்த அதே நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த 31 வயதான இந்த கிரண் குமார் தான் பிரதிமாவை கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த கொலைக்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண்குமார் ஏற்கனவே டிரைவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதனால், மீண்டும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என பிரதிமாவிடம் கேட்டு வந்தார். ஆனால், தவறு செய்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என்றும் உறுதியாக கூறியுள்ளார் பிரதிமா. வேலை தர மறுத்த கோபத்தில் அவரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கிரண்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதாவது வெறும் 8 நிமிடத்தில் பிரதிமாவை கொன்றான் கிரண்.. இது தொடர்பாக பெங்களூரு போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Karnataka woman officer's murder: 1 detained, was upset over being fired -  India Today

இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 3 மாதங்கள் ஆகிறது.. இந்த 3 மாதங்களாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 70 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளுடன் 600 பக்க ஆவணத்தையும் போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிரதிமாவின் அதிகாரப்பூர்வ கார் டிரைவராக கிரண் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.பலமுறை கவனக்குறைவாக காரை ஓட்டியிருக்கிறார். இதற்கு பிரதிமா அவனை பலமுறை திட்டியிருக்கிறார். அதனால்தான் கிரணை இந்த வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.

“பிரதிமாவை மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறு கிரண் கேட்டுள்ளார். ஆனால் ப்ரதிமா சம்மதிக்கவில்லை. அதனால் தான் பிரதிமா மீது கோபம் கொண்டு அவரை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டான். குற்றப்பத்திரிகையில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web