பெரும் சோகம்... சரிந்து விழுந்த மேடை.. 5 பேர் உடல் நசுங்கி பலி...50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
மேடை சரிவு
 


 
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில்  ஜெயின் சமூகத்தினர்   ஆன்மிக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான பகவான் ஆதிநாதரை போற்றும் வகையில் இந்த விழா நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.  Nirvana Laddu parv கொண்டாட்டம் என்பது நடந்தது. இதில் ஜெயின் சமுகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு  லட்டு  பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.

 
அப்போது திடீரென்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரத்தால் ஆன மேடை சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து  அறிந்ததும், போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

மேடை சரிவு

 போலீசார், மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்கள்  அனைவரும் உடனடியாக  மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!