அப்துல் கலாம் ஆசிரியர் காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
சின்னத்துரை

 இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம். இவரது ஆசிரியர் சின்னதுரை வயது மூப்பு காரணமாகக் காலமானார். இவருக்கு வயது 101. இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆசிரியப் பணியிலும் இறைத்தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் அருட்தந்தை சின்னத்துரை.

ஸ்டாலின்

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், மாணவர்களுக்கும், அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அருட்பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் முதலிய பல சான்றோர்களை உருவாக்கியவர் அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை. இவர் வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார் என அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

`அக்னிச் சிறகுகள்’ அப்துல்கலாம் 90 வது பிறந்த நாள்!

ஆசிரியப் பணியிலும் இறைத்தொண்டிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்து உள்ளார் அருட்தந்தை சின்னத்துரை. அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், மாணவர்களுக்கும்,  அருட்பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web