உங்கள் அன்பை ஏற்க வருகிறேன்... நாளை முதல்வர் அரிட்டாப்பட்டி வருகை!

தமிழகத்தில் மதுரை மாவட்டம் மேலூரில் நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாப்பட்டி பகுதியில் 4,981.64 ஏக்கர் நிலத்தில் 'டங்ஸ்டன்' கனிமத்தை எடுப்பதற்காக சுரங்க உரிம குத்தகைக்கு விட கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த உரிமத்தை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு நவம்பரில் உரிமம் வழங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டங்களை நடத்தினர். 50 கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தியது.இது குறித்து 2024 நவம்பர் 29ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.மேலும் தமிழ்நாடு சட்டசபையில், 'டங்ஸ்டன்' கனிமச்சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக பா.ஜ.க.வும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது.
உங்கள் அன்பை ஏற்க நாளை #அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்! #Tungsten pic.twitter.com/OV1db5dXGc
— M.K.Stalin (@mkstalin) January 25, 2025
மாநில தலைவர் அண்ணாமலை அந்த பகுதி விவசாயிகளுடன் பேசி, திட்டத்தை ரத்து செய்ய துணை நிற்பதாக கூறினார். மத்திய சுரங்கம் மற்றும் கனிமத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். அதன்பேரில் 'டங்ஸ்டன்' திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊர் முக்கிய பிரமுகர்களுடன் அண்ணாமலை டெல்லியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை மீண்டும் சந்தித்தார். மோடியுடன் பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் காத்திருந்தனர். இந்நிலையில், 'டங்ஸ்டன்' திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. போராட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் கொண்டாடினர். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அரிட்டாப்பட்டியில் நாளை நடைபெற உள்ள பாராட்டு விழாவுக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாப்பட்டிக்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன்!" எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!