தமிழகத்தில் ஸ்டாலின் உட்பட தலைவர்களின் படங்கள் அகற்றம்.. மும்மூரமாக நடக்கும் 'விதிமுறை' பணிகள்!
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) அதிரடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.

1. தலைவர்களின் படங்கள் அகற்றம்:
தேர்தல் நடத்தை விதிகளின்படி, வாக்காளர்களைக் கவரும் வகையில் எந்தவொரு அரசியல் தலைவரின் புகைப்படமும் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடாது.
-
இதனால், தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சி அலுவலகங்கள் வரை உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
-
குறிப்பாக அமைச்சர்களின் அறைகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் பெயர் பலகைகளை மூடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த மெகா பேனர்கள், சுவரொட்டிகள் மற்றும் திட்டப் பெயர்கள் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன.
-
பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள திட்ட விளம்பரங்கள் கறுப்புத் துணி அல்லது காகிதங்களைக் கொண்டு மறைக்கப்பட்டு வருகின்றன.
-
அரசு இணையதளங்களில் உள்ள அரசியல் சார்புடைய படங்களும் தற்காலிகமாக நீக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, மாநிலத்தின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் பறக்கும் படைகள் தங்களது சோதனையைத் தொடங்கியுள்ளன. தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளனர். தனியார் இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் சுவரொட்டிகளையும் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
