நாளை தஞ்சையில் ஸ்டாலினின் 4-ம் கட்ட பிரச்சாரம்... நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு!

 
ஸ்டாலின் பிரசாரம் ஸ்டாலின் பிரசாரம்

நாளை தஞ்சையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  நான்காம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.  நாளை மாலை 5 மணிக்குத் தஞ்சாவூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம். மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் கூட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். இரவு 7 மணிக்கு திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) பொதுக்கூட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை தொகுதி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார்.

ஸ்டாலின் திமுக

ஏப்ரல் 12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடைபெறும் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளர்களுக்காக முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

பரப்புரைப் பயணம் குறித்த நேரத்திற்குள் நடைபெற வேண்டும் என்பதால், திமுக தலைமை சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதல்வர் செல்லும் வழியில் நிர்வாகிகள் எக்காரணம் கொண்டும் வரவேற்பு நிகழ்ச்சிகளோ அல்லது இதர நிகழ்ச்சிகளோ ஏற்பாடு செய்யக் கூடாது. நிர்வாகிகள் முதல்வர் தங்கும் இடத்திற்கு வந்து சந்திப்பதைத் தவிர்த்து, நேரடியாகப் பொதுக்கூட்ட மேடைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

தேதி

இடம்

நேரம்

ஏப்ரல் 10

தஞ்சாவூர்

மாலை 5:00 மணி

ஏப்ரல் 11

புதுக்கோட்டை

மாலை 4:00 மணி

ஏப்ரல் 11

திருப்பத்தூர்

இரவு 7:00 மணி

ஏப்ரல் 12

பரமக்குடி

மாலை 4:00 மணி

ஏப்ரல் 12

தூத்துக்குடி

இரவு 7:00 மணி