ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணிநீக்கம்!

 
ஸ்டார்பக்ஸ் ஸ்டார்பக்ஸ்

உலகப் புகழ்பெற்ற சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அமெரிக்காவில் உள்ள தனது தலைமை அலுவலகங்களில் பணியாற்றி வந்த 300 ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் அன்றாடச் செலவுகளைக் குறைத்து, லாபத்தை மீண்டும் அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

காபி பிரியர்களே!! காபியை இப்படி குடிச்சி பாருங்க!!  25 கப் குடிச்சாலும் ஒன்னும் ஆகாது!!

சமீப காலமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவு மற்றும் பொருளாதார சவால்களைச் சமாளிக்க முடியாமல் இந்த நிறுவனம் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனத்தின் நிர்வாக அமைப்பை முழுமையாக மாற்றி அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே இந்த 300 ஊழியர்களின் வேலை பறிபோயுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

காபி

பொருளாதார நெருக்கடி காரணமாகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவது உலக அளவில் தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ள நிலையில், தற்பொழுது காபி வணிகத்தில் முன்னணியில் இருக்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த திடீர் வேலைநீக்க நடவடிக்கை தனியார் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.