இன்று துவங்குகிறது... தமிழக அரசு சார்பில் சொந்த யூடியூப் சேனலை உருவாக்க பயிற்சி வகுப்புகள்!

 
தமிழக அரசு

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தமிழக மக்களுக்கு, சொந்தமாக யூ -ட்யூப் சேனலை உருவாக்குதல், இணையதளத்தில் யூ-ட்யூப் சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்தல், வணிக நோக்கில் யூ-ட்யூப் சேனல் நடத்துவது  குறித்த பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்க உள்ளது.


தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சொந்தமாக யூ-ட்யூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூ-ட்யூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி இன்று பிப்ரவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் தொழில் முனைவோர் யூ -ட்யூப் சேனலை உருவாக்குவது எப்படி? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்குதல், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது? பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை அரசு முடக்கியது

இப்பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்கிற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web