பத்திரமா இருங்க மக்களே... தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை கொட்டும்!

 
மழை மழை

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம் போன்ற தென் கடலோர மாவட்டங்களிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.

கன மழை

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்) மற்றும் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு (ஏப்ரல் 27 வரை) மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு மையங்களில் மழை குறுக்கிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாளை மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மழை கனமழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்பதால், நாளை வாக்களிக்கச் செல்வோர் வெப்பத்தைத் தவிர்க்க முன்கூட்டியே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.