விமானக் கட்டணம் அதிரடி உயர்வு.. சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

 
ஏர் இந்தியா விமானம்
 


 தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதால் பள்ளிகள் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையும் முன்கூட்டியே விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயில் இப்போதே பல பகுதிகளில் கொளுத்தி வருகிறது. இதனையடுத்து கோடையை உற்சாகமாக கொண்டாட பலரும் சுற்றுலாவுக்கு திட்டமிட்டு வருகின்றனர். ரயில் , பேருந்து பயணங்கள் எல்லாம் மலையேறிப் போன இக்காலகட்டத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விமானம் விமான நிலையம்

 இதன் காரணமாக விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் செர்ரி பூக்கள் பூக்கும் மாதம் என்பதால் ஜப்பான், தென்கொரியாவுக்கு, சவுதி அரேபியா செல்ல பலரும் திட்டமிட்டு வருகின்றனர். குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவிற்குள் அந்தமான், ஸ்ரீநகர், மணாலி, டார்ஜிலிங், கோவா, பூரி, ரிஷிகேஷ், கொடைக்கானல், முசோரி, லட்சத்தீவு மற்றும் ஆகிய இடங்களுக்கும் செல்ல அதிகமான பயணிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்பைஸ்ஜெட் விமானம்

விமான டிக்கெட்டுகளின் விலையானது மே மாதம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி  இலங்கைக்கு  ரூ.14500 முதல் ரூ.20000 வரையும்,  பாங்காங் செல்ல ரூ.25000 முதல் ரூ.29000 வரை  சிங்கப்பூர்-ரூ.20000 முதல் 30000 வரை, துபாய் ரூ25000 முதல் 30000 வரை  டெல்லி-ரூ.13000 முதல்  ரூ.20000 வரை , கோவா-ரூ.7900 முதல் ரூ.26000 வரை லட்சத்தீவு-ரூ.23 500, அந்தமான்-ரூ.13000  முதல் ரூ.15,800 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web