ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க... தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு!

 
ஸ்டெர்லைட்
 


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!


இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார். அப்போது,” வழக்கின் விசாரணையை மக்களவை தேர்தலுக்கு பிறகு தள்ளிவைக்க வேண்டும்” என கேட்டு கொண்டார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் ஹென்றி திபேன்,  ”துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தற்போது வரை வழங்கவில்லை” என கூறினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, ”அறிக்கை தயாராகி விட்டது. அடுத்த  விசாரணையில் சமர்பிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2வது ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்  தொடக்கம்!
இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

From around the web