மதர் போர்ட்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்து... ரூ.10.9 கோடிக்கு ஏலம் போன 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர்!
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் 1976-ஆம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆப்பிள்-1' கணினி, நியூயார்க்கில் நடைபெற்ற பொன்ஹாம்ஸ் ஏலத்தில் ரூ.10.9 கோடிக்கு ($1.15 மில்லியன்) விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.
தற்போது இயங்கும் நிலையில் உள்ள இந்த கணினியின் முக்கிய மதர்போர்டில் ஸ்டீவ் வோஸ்னியக்கின் "Woz" என்ற அசல் கையொப்பம் இடம் பெற்றுள்ளது. மேலும், இக்கணினியை மேம்படுத்தக் கோரி ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய அரிய கையெழுத்துக் கடிதம் மற்றும் பயனர் கையேடு ஆகியவை இதனுடன் இணைக்கப்பட்டிருப்பது இதன் மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
இக்கணினியைக் கைப்பற்றுவதற்காக இரு முக்கிய ஏலதாரர்களுக்கு இடையே சுமார் 28 நிமிடங்கள் கடுமையான ஏலப் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகில் இயங்கும் நிலையில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சில 'ஆப்பிள்-1' கணினிகளில் இதுவும் ஒன்று என்பது இக்கணினியின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகிறது.
