ஜோ ரூட்டின் உலக சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித் - டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று மைல்கல்!

 
ஸ்டீவ் ஸ்மித்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இப்போட்டியில் இரண்டு முக்கியமான கேட்சுகளைப் பிடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத ஃபீல்டர்களில் மிக அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றுள்ளார்.

இதன் மூலம் இதுவரை 220 கேட்சுகளுடன் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் உலக சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். தற்போது 221 கேட்சுகளைப் பதிவு செய்து ஸ்மித் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கிரிக்கெட் உலக அரங்கில் ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த அபாரமான சாதனைக்குத் தற்போது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.