பங்குச்சந்தையில் ஏற்றம்! IT துறைக்கு பின்னடைவு... TCS உள்ளிட்ட பங்குகள் சரிவு

 
tcs

 

இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், நிஃப்டி 50 குறியீடும் 23,300 புள்ளிகளைக் கடந்து முன்னேற்றம் கண்டுள்ளது.சமீபத்திய சரிவுக்குப் பிறகு சந்தையில் வாங்குதல் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் சந்தைக்கு ஆதரவாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MarketToday | N Chandrasekaran reappointed as chairman: Tata Chemicals, Tata Investment, TCS, Tata Tech shares rise up to 13% http://ow.ly/t1Fe106ET5I

 

ஒட்டுமொத்த சந்தை ஏற்றத்தில் இருந்தாலும், தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளில் விற்பனை அழுத்தம் காணப்படுகிறது.குறிப்பாக TCS உள்ளிட்ட சில முக்கிய ஐடி பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக நிஃப்டி ஐடி குறியீடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. முந்தைய வர்த்தகத்திலும் Nifty IT மட்டுமே சரிவில் இருந்ததாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

 MarketToday | Sensex slips, Nifty settles higher; Tata stocks gain after N Chandrasekaran reappointment http://ow.ly/KmWn106ETer

செப்.17-ம் தேதி வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 74,314.59 புள்ளிகளிலும், நிஃப்டி 23,270.60 புள்ளிகளிலும் முடிவடைந்தன. இந்நிலையில் இன்று தொடக்க வர்த்தகத்தில் நிஃப்டி மீண்டும் 23,300 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க வட்டி விகிதம், அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை உள்ளிட்ட காரணிகள் இன்றைய இந்திய பங்குச்சந்தையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.