திருடு போன காஸ்ட்லி பைக்.. புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.. கதறும் இளைஞர்!

 
அபிஜித்

கால் சென்டரில் பணிபுரியும் வாலிபரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டது. இது குறித்து புகார் அளித்தும், போலீசார் புகார் பெறவில்லை. இந்நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அபிஜித் (22). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள கால் சென்டரில் பணியாற்றி வருகிறார். மேலும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்டோரை சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஜக்கப்பனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்க நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அபிஜித் கடந்த ஜூலை 2023 இல் தனது வருமானத்தைக் காட்டி வங்கியில் இருந்து Yamaha R15 பைக்கை வாங்கினார். கடந்த 3ம் தேதி வேலை முடிந்து பைக்கை தான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நிறுத்தினார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அபிஜித் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பைக்கை ஒருவர் எடுத்துச் சென்றதும், சாலையோரம் 3 பேர் பைக்கை திருடிச் சென்றதும் தெரிந்தது. இந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசில் அன்றே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அபிஜித்தை அவரது நிறுவனம் பணி நீக்கம் செய்தது. மேலும் அவர் தங்கியிருந்த குடியிருப்பை காலி செய்யும்படியும் கூறியுள்ளது. இதுகுறித்து அபிஜித்  கூறுகையில், கடந்த ஆண்டு வேலையை நம்பி பைக் வாங்கினேன். இன்னும், 2 ஆண்டுகள் மீதி தொகை கட்ட வேண்டியது உள்ளது. இந்நிலையில் எனது பைக்கை மூன்று பேர் திருடிச் சென்றுவிட்டனர். 'சிசிடிவி' ஆதாரங்களுடன் புகார் அளித்தும், புகாரை ஏற்க போலீசார் மறுக்கின்றனர். பைக்கைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார்கள். தேர்தலின் போது உடைகள் காணும், பைக் காணும் என்று வரீர்கள் என்றும் திட்டினர்.

ஆதாரங்களுடன் புகார் அளித்தும், புகாரை ஏற்க போலீசார் மறுக்கின்றனர். என் நிறுவனமும் நீ போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய் என்று சொல்லி வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. தங்கும் இடத்தையும் காலி செய்யச் சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் திருட்டு நடந்தால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல், ஆதாரம் அளித்த பிறகும், புகாரை பெற்று, ரசீது கூட கொடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிப்பேன் என வேதனையில் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web