வயிற்று வலி தாங்க முடியல... 6ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு!
Sep 5, 2026, 20:20 IST
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன், கடந்த சில நாட்களாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். இந்நிலையில் வயிற்று வலி தாங்க முடியாமல் மனவேதனை அடைந்த அந்த மாணவன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டான்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினரும் மற்றும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மாணவன் தீக்குளித்துக் கொண்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
